×

பாஜ பிரமுகரின் பன்றி மாணவனை கடித்து குதறியது: நெல்லையில் பரபரப்பு

நெல்லை: நெல்லை அருகே பள்ளி மாணவனை பன்றி கடித்த சம்பவம் தொடர்பாக பாஜ பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் பாலாமடை அருகேயுள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(47). இவரது மகன் அருணாசலபெருமாள்(13). இவர், இங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் நடராஜன்(37). இவர், பண்ணை வைத்து 150க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார். மானூர் வடக்கு ஒன்றிய பாஜ பிரசார அணி துணை தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி அருணாசலபெருமாள் ஆற்றில் குளித்துவிட்டு அவ்வழியாக வந்தபோது நடராஜன் வளர்த்து வந்த பன்றி, சிறுவனை கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பன்றி கடித்த இடத்தில் மட்டும் சிறுவனுக்கு 10 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீசார், நடராஜன் மீது ஆபத்தான விலங்குகளை அஜாக்கிரதையாக வளர்த்து, கொடுங்காயத்தை ஏற்பட காரணமாக இருந்ததாக 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பாஜ பிரமுகரின் பன்றி மாணவனை கடித்து குதறியது: நெல்லையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BAJA PRAMUGUK ,Nella ,Baja Pramukar ,Muthukumar ,Vepangulata ,Palamada ,Nella district ,Arunachalaberumal ,Baja Pramukh ,Nellai ,
× RELATED பள்ளி கட்டிடத்தை விரைந்து...