×

பாலிவுட்டில் மீண்டும் நித்யா மேனன்

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் படங்களில் நடிக்கிறார் நித்யா மேனன். தமிழில் கடைசியாக தனுஷ் ஜோடியாக ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன் விஜய்யுடன் ‘மெர்சல்’, விக்ரமுடன் ‘இருமுகன்’, சூர்யா ஜோடியாக ‘24’, ‘காஞ்சனா 2’, ‘சைக்கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில் அக்‌ஷய் குமார் நடித்த ‘மிஷன் மங்கள்’ படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அபிஷேக் பச்சனுடன் ‘ப்ரீத் – இன் டு த ஷெடோவ்ஸ்’ என்ற வெப்சீரிஸில் நடித்தார். இந்நிலையில் இப்போது இந்திப் படம் ஒன்றில் கதாநாயகியாக அவர் நடிக்க உள்ளார். விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கும் ‘மர்டர் மிஸ்டரி’ இந்தி படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார்.
இதில் விவேக் ஓபராய், ஆசிஷ் வித்யார்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். ஒரு கொலையை சுற்றி நடக்கும் கதையில் ஆசிஷ் வித்யார்த்தி மூத்த விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடந்து வருகிறது. இதற்காக நித்யா மேனன் அங்கு சென்றுள்ளார். அங்கு 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

The post பாலிவுட்டில் மீண்டும் நித்யா மேனன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nithya Menon ,Bollywood ,Chennai ,Dhanush ,Vijay ,Vikram ,Suriya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED டீப் ஃபேக் வீடியோவால் அரசியல்...