×

சல்மான்கான் படத்தில் சமந்தாவா

மும்பை: தமிழில் ‘குறும்பு’, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘சர்வம்’, ‘யட்சன்’, அஜித் குமார் நடித்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’, தெலுங்கில் ‘பஞ்சா’ ஆகிய படங்களை இயக்கியவர். விஷ்ணுவர்தன். கடந்த 2021ம் ஆண்டு இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடித்த ‘ஷெர்ஷா’ என்ற படத்தை இயக்கினார். இது வெற்றிகரமாக ஓடி ரசிகர்களை ஈர்த்தது. தற்போது அதர்வா முரளி தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் பெயர்சூட்டப்படாத படத்தை இயக்குகிறார். அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். இதற்குப் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கும் பான் இந்தியா படத்தில் சல்மான்கான் நடிக்கிறார். இதை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

ராணுவ அதிகாரியாக சல்மான்கான் நடிக்கிறார். ஹீரோயினாக நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது. அதேவேளையில், சமந்தாவிடம் பேசி வருவதாகவும் கூறப் படுகிறது. தசை அழற்சி நோயில் இருந்து மீள்வதற்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற சமந்தா, நடிப்புக்கு இடைவெளி விட்டு ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், சல்மான்கான் ஜோடியாக நடிப்பது குறித்து சமந்தா தரப்பில் உறுதி செய்யவில்லை. அவர் இல்லை என்றால் அனுஷ்கா அல்லது திரிஷா நடிப்பாராம்.

The post சல்மான்கான் படத்தில் சமந்தாவா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : samanthava ,Mumbai ,Ajit Kumar ,Billa ,Vishnuvardhan ,Siddharth Malhotra ,Kiara Advani ,Salmankan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை, மும்பையில் ₹45 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி