×

துல்கர் சல்மான் ஜோடியாக மீனாட்சி சவுத்ரி

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ் நடித்த ‘வாத்தி’, ‘சார்’ ஆகிய படங்களை வெங்கி அட்லூரி இயக்கினார். தற்போது அவர் இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். ‘லக்கி பாஸ்கர்’ என்று பெயரிடப்பட்ட இதை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இதில் துல்கர் சல்மான் ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். பிரபல மாடலான இவர், விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழில் வெளியான ‘கொலை’ என்ற படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக ‘குண்டூர் காரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில புதுப்படங்களிலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

The post துல்கர் சல்மான் ஜோடியாக மீனாட்சி சவுத்ரி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Meenakshi Chaudhary ,Dulquer Salmaan ,CHENNAI ,Venky Atluri ,Dhanush ,Sithara Entertainment ,Fortune… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி