×

100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கிய விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: சிவ நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடி சேர்ந்து நடித்த படம், ‘குஷி’. கடந்த 1ம் தேதி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று, இதுவரை 70 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்தின் வெற்றிவிழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா, ‘எனது சம்பளத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை எடுத்து, தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் 100 குடும்பங்களுக்கு வழங்குவேன். இத்தொகை ஐதராபாத்தில் நடக்கும் ‘குஷி’ படத்தின் நிகழ்ச்சிக்கு முன்பே வழங்கப்படும்’ என்று சொன்னார். அதன்படி, 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் வழங்கினார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

 

The post 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கிய விஜய் தேவரகொண்டா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Devarandha ,Hyderabad ,Samantha Jodi ,Shiva Nirvana ,Kushi ,Vijay Devaronda ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்