- கொச்சி
- மலையாளத் திரைப்பட தொழிலாளர்களின் கூட்டமைப்பு
- கேரளா
- பெப்கா
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
![]()
கொச்சி: கேரளாவில் இயங்கி வரும் மலையாள திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், ‘பெப்கா’ என்றழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில் 21 திரைப்பட சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே மலையாளப் படங்களில் பணியாற்ற முடியும். இந்த அமைப்பில் கேரள திரைப்பட கார் ஓட்டுநர்கள் சங்கம் இடம்பெற்றுள்ளது. தற்போது 560 ஓட்டுநர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அனைவரும் ஆண்கள். இவ்வளவு பேரில் 15 பேர் மட்டுமே கேரவன் ஓட்டுகின்றனர்.
இந்நிலையில், 5 பெண் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காகவே இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. மலையாள திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான கூட்டுறவு சங்கத்தில், அவர்கள் சொந்த வாகனம் வாங்குவதற்காக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்றும், கேரவன் உள்பட கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
The post மலையாள படவுலகில் கார் டிரைவராக பெண்கள் நியமனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
