×

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட உணவு பாதுகாப்புத்துறையில் 3 மடங்கு வருவாய் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுக்கு வாழ்த்து

சென்னை:  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, தி.நகரில் மாநில அளவிலான உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கான பயிலரங்கினைத் தொடங்கி வைத்தார். அப்போது, துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆணையராக உணவு பாதுகாப்புத்துறையின் தலைவர் உள்ளார். சென்னை, தஞ்சாவூர், மதுரை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலுள்ள ஆறு உணவு ஆய்வகங்களில் உணவு மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான பயிலரங்கம் இன்று (நேற்று) துவங்கப்பட்டு 32 மாவட்ட நியமன அலுவலர்கள், 64 உணவு பாதுகாப்பு அலுவலர்கள், 3 உணவு பகுப்பாய்வாளர்கள் ஆகியோருக்கு வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இத்துறையில் உரிமம் மற்றும் பதிவுச்சான்று மூலமாக பெறப்பட்ட வருவாய் ₹38.2 கோடி, கடந்த வருடத்தை விட 3 மடங்கு அதிக அளவு வருவாய் பெற உழைத்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுளுக்கு சுகாதாரம் மற்றும் சுத்தமான பிரசாதம் வழங்கும் ‘போக்’ சான்றிதழ் வழங்கப்பட்ட கோயில்களின் எண்ணிக்கை 379ஆகும். மே 2021 முதல் பிப்ரவரி 2022 வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 91 டன் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தயாரித்த, விற்பனை செய்த தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு பிப்ரவரி 2022 வரை 9 அவசர தடையாணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்….

The post தமிழகத்தில் கடந்த ஆண்டை விட உணவு பாதுகாப்புத்துறையில் 3 மடங்கு வருவாய் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுக்கு வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Ma ,Supramanian ,Chennai ,Minister of Medicine ,People's Welfare ,Ma. Subramanyan ,safety ,Supramanaian ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...