×

மீரா நந்தனுக்கு விரைவில் திருமணம்

சென்னை: மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை மீரா நந்தன். அவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்து இருக்கிறார். சரத்குமார் ஜோடியாக சண்டமாருதம் மற்றும் வால்மீகி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
சமீப காலமாக மீரா நந்தன் தாராளமான கவர்ச்சி காட்டவும் தொடங்கி இருந்தார். அது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் அவர் அதற்கு பதிலடியும் கொடுத்து இருந்தார். துபாயில் வசிக்கும் நான் அப்படி தான் டிரெஸ் போடுகிறேன் என கூறி இருந்தார் அவர். இந்நிலையில் தற்போது மீரா நந்தன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.

லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஜு என்பவருடன் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. இது பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்தது. காதல் கிடையாது. விரைவில் திருமணம் நடக்கும் என்கிறார் மீரா. இதையடுத்து மீரா நந்தனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post மீரா நந்தனுக்கு விரைவில் திருமணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Meera Nandan ,Chennai ,Sarathkumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கையை வலுப்படுத்தக் கோரிய ராதிகா: காங்....