×

தமிழகத்தில் உலக செஸ் போட்டி நடைபெறுவது 10 மாத கால ஆட்சிக்கு பெருமை சேர்த்துள்ளது: சபாநாயகர் அப்பாவு புகழாரம்

சென்னை: சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: உலக செஸ் போட்டிஉலகத்தின் பல நாடுகளிலும் நடந்தது. தற்போது இந்தியாவில் அந்த செஸ் போட்டி நடைபெறுவதற்கு அனுமதி அளித்துள்ளார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்தில் இதை நடத்தினால் அமைதியாக, பாதுகாப்பாக எல்லா நாட்டுக்காரர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் மாநிலம் எது என்று கேட்டபோது, தமிழ்நாடு தான் சிறந்தது என்று தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இது 10 மாத கால ஆட்சிக்கு பெருமை சேர்த்துள்ளது. நேற்று, இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் ஆசிரியர்கள், ஆயுதப்படை அதிகாரிகள், குடிமைப்பணி ஆசிரியர்கள், அதிகாரிகள், நமது நட்பு நாடான ஆஸ்திரேலியா, ஈரான் உள்பட பல நாடுகளில் உள்ள பல பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு ஆய்வு செய்து எந்தெந்த மாநிலம் எவ்வாறு இருக்கிறது, பாதுகாப்பு எந்தநிலையில் இருக்கிறது, இந்தியாவின் பாதுகாப்பிற்கு துணையாக எந்தெந்த மாநிலங்கள் எந்த அளவில் பாதுகாப்பாக இருக்கிறது என்று ஆளுநரை சந்தித்தனர். அதற்கு ஆளுநர் அமைதி, நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு என சொல்லியிருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை. ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் தமிழக முதலீட்டாளர்களை முதலில் அழைத்து 4 முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி ரூ.62 ஆயிரம் கோடி நிதியை பெற்று 1 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்தது பெருமையாக இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது. வெளிநாடு செல்லும் நமது முதல்வர் பல லட்சம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை பெறுகின்ற வகையில் முதலீட்டை பெற்று வருவார் என்று வாழ்த்துகிறேன். …

The post தமிழகத்தில் உலக செஸ் போட்டி நடைபெறுவது 10 மாத கால ஆட்சிக்கு பெருமை சேர்த்துள்ளது: சபாநாயகர் அப்பாவு புகழாரம் appeared first on Dinakaran.

Tags : World Chess Tournament ,Tamil Nadu ,Speaker ,Appavu Pukhazaram ,Chennai ,Appavu ,India ,Tamil ,Nadu ,Appavu Pukhazharam ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளி..!!