- மஞ்சுர்வாட்ரெட்டி
- கோயில் திருவிழா
- திருப்பத்தூர்
- திருப்புத்தூர்
- நெடுமலையரசி
- அம்மன் கோயில்
- பன்குனி திருவிழா
- மஞ்சுருடாத்
- மஞ்சுவாடு
- தின மலர்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நெடுமறம் ஸ்ரீமலையரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். திருப்புத்தூர் அருகே நெடுமறம் ஸ்ரீமலையரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நெடுமறம், என்.புதூர், சில்லாம்பட்டி, ஊர்க்குளத்தான்பட்டி, உடையநாதபுரம் ஆகிய கிராமத்தினர் சார்பில் ஆண்டு தோறும் மஞ்சுவிரட்டு நடைபெறும். இந்தாண்டு நேற்று காலை தொழுவிற்கு 121 மாடுகள் கொண்டுவரப்பட்டன. பின்னர் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 39க்கும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை பிடித்தனர். முன்னதாக காலை 10 மணியளவில் திருப்புத்தூர் மற்றும் இதனை சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் அலங்கரித்து மாலை, துண்டு கட்டி கொண்டுவந்து காலை 10 மணியளவில் நெடுமறம் பகுதியில் உள்ள கண்மாய், வயல்காட்டுப்பொட்டல் உள்ளிட்ட இடங்களில் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. அப்பகுதியில் கூடியிருந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடித்தனர். இதில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த ஆத்தங்கரைப்பட்டியைச்சேர்ந்த பாலாஜி (35) சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், ஓ.சிறுவயலை சேர்ந்த அழகப்பன் (22) காரைக்குடி அரசு மருத்துவமனையிலும், பொன்னமராவதியை சேர்ந்த முத்தையா (60) பென்னமராவதி அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டடுள்ளனர். இந்த மஞ்சு விரட்டை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். …
The post திருப்புத்தூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டி 20 பேர் காயம் appeared first on Dinakaran.