×

ஆதரவற்றோருக்கு உணவளித்த நடிகை ஆத்மிகா

சென்னை: நடிகை ஆத்மிகா சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். கோவையில் பிறந்து இன்று தமிழ் திரையுலகில் நல்ல நடிகையாக வளம் வருபவர் தான் ஆத்மிகா. கடந்த 2017ம் ஆண்டு வெளியான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில் நடிகை ஆத்மிகா சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; விரைவில் சமூக தொண்டு நிறுவனம் தொடங்கி, பல நற்காரியங்களில் ஈடுபடப்போகிறேன்.

சினிமா நடிப்பு, தொழில்நுட்ப ஈடுபாடு, மெய்ஞான பேச்சாற்றல் என பன்முக திறமை கொண்ட ஆத்மிகாவிடம் இதைப்பற்றி கேட்டபோது, ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பதும், கஷ்டத்தில் வாடும் உயிர்களுக்கு உதவுவதுமே ஆன்மீகத்தின் உச்சம். சிறுவயதிலிருந்தே பொதுநல ஈடுபாடு அதிகமுள்ள ஆத்மிகா, விரைவில் சமூக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி, பல நற்காரியங்களில் ஈடுபடப்போவதாக உறுதியளித்தார்.

The post ஆதரவற்றோருக்கு உணவளித்த நடிகை ஆத்மிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aathmika ,Chennai ,Admika Chennai ,Vadapalani Murugan Temple ,Goa ,Atmika ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...