×

தி நன் 2 – திரைவிமர்சனம்

நியூ லைன் சினிமா தயாரிப்பில் வார்னர் பிரதர்ஸ் வெளியீட்டில் மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் தைஸா ஃபெர்மிகா, ஜோனாஸ் பிளக்கெட், ஸ்டோர்ம் ரீட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஹாரர் படம் ‘ தி நன் 2‘. 2018ம் ஆண்டு வெளியான ‘தி நன்‘ பாகத்தின் தொடர்ச்சி மற்றும் இதற்கு முன்பு வெளியான ‘தி கான் ஜீரிங்‘ கதைகளுக்கு முன்னாள் நடக்கும் கதையாகவும், அதன் ஒன்பதாம் பாகமாகவும் வெளியாகியிருக்கிறது. ஒரு பழமையான தேவாலயம் அதனுள் இருக்கும் கன்னியாஸ்திரிகளின் மரணங்கள் அவர்களைக் காப்பாற்ற களமிறங்கும் இளம் கன்னியாஸ்திரி மார்கட் என்கிற ஐரீன் (தைஸா ஃபெர்மிகா) என முதல் பாதியில் கஷ்டப்பட்டு ‘நன்‘ பேயை அடக்கியிருப்பார் மார்கட். ஆனால் படம் முடிவில் ‘நன்‘ தேவாலய உதவியாளனாக வரும் மௌரீஸ் தெரியால்ட் (ஜோனாஸ் பிளாக்வெட்) மேல் இறங்கியிருப்பதாகக் காட்ட அந்தப் பாகம் முடிந்திருக்கும்.

2ம் பாகத்தில் தொடர்ந்து நடக்கும் தேவாலய மரணங்கள், மற்றும் தேவாலய பள்ளியில் நிகழும் அமானுஷ்ய பிர்ச்னைகள் என மீண்டும் பிரச்னைகள் தலை தூக்கும். மேலும் ஜோனாஸ் பல தேவாலயங்களில் வேலை செய்து அங்கிருக்கும் ஃபாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் என கொடூரமாக கொலை செய்துவிட்டு தற்போது தேவாலய பள்ளியில் இணைந்து அங்கும் பேயாட்டம் போட மீண்டும் வருகிறார் மார்கட். ‘நன்‘ பேயின் தேவை என்ன, எதைத் தேடி இத்தனைப் பிரச்னைகளைக் கொடுக்கிறது ஐரீன் அதனை விரட்டினாரா இல்லையா? என்பது மீதிக்கதை. இயக்குநர் மைக்கேல் சாவ்ஸ் ‘கான்ஜூரிங்‘ பாகங்களுக்கு முன்னாள் நடக்கும் ஐரினின் சிறுவயது வாழ்க்கை, மற்றும் அங்கிருந்து தொடரும் வாலக் பேய் என இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார். ‘கான்ஜூரிங்: தி டெவில் மேட் மி டு டு‘ , ‘தி கர்ஸ் ஆஃப் லா ல்லோரோனா‘ உள்ளிட்ட படங்களை இயக்கிய மைக்கேல் சாவ்ஸ் ஹாரர் நிபுணராக இந்தப் படத்திலும் பல ஜெர்க் மொமெண்ட்களைக் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அதே ஜெர்க் மொமென்ட்கள் தொடர்கதையாகும் போது சலிப்பு உண்டாகிறது. எனினும் புத்தகங்களுக்கு இடையே நிற்கும் நன், பின்னால் நிழலாக மாறி அரட்டும் நன் என நன் நன்றாகவே காட்டு காட்டென காட்டுகிறது. ட்ரிஸ்டர் நைபி ஒளிப்பதிவும், மார்கோ பெல்ட்ரமி இசையும் படத்துக்கு பலம். குறிப்பாக தேவாலய விளக்குகள், அதன் அரை இருள் இவைகளே நம்மை பாதி பயத்தை உண்டாக்கிவிடும். மொத்தத்தில் ‘கான்ஜூரிங்‘ பாகங்கள் பிடிக்கும் என்போர் நிச்சயம் இந்தப் படத்தைத் தவற விடாமல் பார்க்கலாம்.

The post தி நன் 2 – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : New Line Cinema ,Warner Brothers ,Michael Chaves ,Taisa Farmiga ,Jonas Pluckett ,Storm Reid ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சினிமா நடிகர்களை கொண்டாடாதீர்கள்: பஹத் பாசில் அதிரடி