×

மூத்த நடிகர் தர்மேந்திராவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை: தந்தையை அழைத்து சென்ற மகன்

மும்பை: நடிகர் தர்மேந்திராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக அவரை அவரது மகன் அமெரிக்கா அழைத்து சென்றார். பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா (87), கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டும், உயர் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக தனது தந்தை தர்மேந்திராவை, அவரது மகனும் பாலிவுட் நடிகருமான சன்னி தியோல் அமெரிக்கா அழைத்து சென்றுள்ளார். அங்கு 15 முதல் 20 நாட்கள் வரை அவர்கள் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது நிலைமையில் தர்மேந்திரா நலமாக இருப்பதாகவும், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

The post மூத்த நடிகர் தர்மேந்திராவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை: தந்தையை அழைத்து சென்ற மகன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dharmendra ,US ,Mumbai ,America ,Bollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி