×

10 நிமிடத்தில் உணவு டெலிவரி!: சோமேட்டோவிடம் விளக்கம் கேட்கும் சென்னை போக்குவரத்து போலீஸ்..!!

சென்னை: 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்று அறிவித்த சோமேட்டோவிடம் விளக்கம் கேட்க சென்னை போக்குவரத்து போலீஸ் திட்டமிட்டுள்ளது. 10 நிமிடத்தில் உணவு வழங்கப்படும் என்ற சோமேட்டோ நிறுவனர் அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சோமேட்டோ திட்டத்தால் சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் என்றும் 10 நிமிட டெலிவரிக்காக போக்குவரத்து விதிகள் மீறப்பட வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்தனர். பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை போக்குவரத்து போலீஸ் விளக்கம் கேட்கிறது. ஆன்லைன் உணவு டெலிவரி செயலியான சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இனி உணவு வெறும் 10 நிமிடங்களில் வாடிக்கையாளரை சென்றடையும் என்று சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்திருந்தார். இது குறித்த தகவலை அவர் சமூக வலைப்பதிவு மூலம் தெரிவித்தார். சோமேட்டோ இன்ஸ்டென்ட் என்ற பெயரில் 10 நிமிடத்தில் டெலிவரி சேவை மூலம் டெலிவரி பாய்ஸ் மீது எவ்விதமான திணிப்பும் செய்யப்போவது இல்லை.30 நிமிட டெலிவரிக்கு இருக்கும் அதே பாதுகாப்பு 10 நிமிட டெலிவரியிலும் உள்ளது என நாங்கள் உறுதி அளிக்கிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இன்றைய தொழில்நுட்பத் துறையில் நிலைத்திருக்க, புதுமைகளை அறிமுகப்படுத்துவது, தொடர்ந்து முன்னேறுவதும் முக்கியம் என அவர் கூறினார். இந்நிலையில், விளக்கம் கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்….

The post 10 நிமிடத்தில் உணவு டெலிவரி!: சோமேட்டோவிடம் விளக்கம் கேட்கும் சென்னை போக்குவரத்து போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai traffic police ,Someto ,CHENNAI ,Chennai Traffic ,
× RELATED வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு