×

மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை; உயர் அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில் மீண்டும் நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். ஆலோசனையில் நிர்வாகத்துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகளும் விரைவாக நடைபெற்றன. வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சிங்காரச் சென்னை 2.0 திட்டம், உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க முதல்வர் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மழைநீர் வடிகால் பணி மற்றும் வெள்ள நீர் தடுப்பு பணிகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்….

The post மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை; உயர் அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief President of the CM ,Rainwater Drainage and ,G.K. Stalin ,Chief Minister ,Muhammed ,Headquarters for Rainwater Drainage and Flood Control Works ,Principal ,B.C. ,Dinakaran ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...