×

உண்மைச் சம்பவ கதையில் மேக்கப் இல்லாமல் நடித்த திரிஷா

சென்னை: ஏஏஏ சினிமா பிரைவேட் தயாரிக்க, அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள படம், ‘தி ரோட்’. வரும் அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வரும் இப்படம், திரிஷாவின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் விஜய் ஜோடியாக திரிஷா நடித்துள்ள ‘லியோ’, வரும் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுக்க திரைக்கு வரவுள்ள நிலையில், முன்னதாக ‘தி ரோட்’ படம் ரிலீசாவது குறித்து திரிஷா மகிழ்ச்சி அடைந்துள்ளார். திரிஷாவுடன் ‘சார்பட்டா பரம்பரை’ டான்ஸிங் ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா,லட்சுமிப்பிரியா சந்திரமவுலி, செம்மலர்அன்னம், வினோத் சாகர், கருப்பு நம்பியார், நேகா நடித்துள்ளனர்.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். மதுரையில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது. எனவே, படம் முழுவதும் திரிஷா மேக்கப் இல்லாமல் நடித்ததுடன், அச்சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்த்து, பிறகு எவ்வித சமரசமும் இல்லாமல் நடித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அடுத்த வாரம் சென்னையில் நடக்கிறது.

The post உண்மைச் சம்பவ கதையில் மேக்கப் இல்லாமல் நடித்த திரிஷா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Trisha ,Chennai ,AAA Cinema ,Arun Vasikaran ,Tirisha ,Vijay ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியான...