×

ரஜினி – சன் பிக்சர்ஸ் இணையும் 5வது படம் அறிவிப்பு: லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்

சென்னை: ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் 5வது முறையாக இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘ஜெயிலர்’. நெல்சன் இயக்கினார். அனிருத் இசையமைத்தார். கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான இப்படம் உலக அளவில் பெரும் வசூல் சாதனைகளை படைத்திருக்கிறது. இந்த படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக, ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களையும் காசோலைகளையும் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் வழங்கினார்.

படத்தில் பணியாற்றிய 300 கலைஞர்களையும் கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாகவும் வழங்கினார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. தற்காலிகமாக ‘தலைவர் 171’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தை கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’, ‘ஜெயிலர்’ என சன் பிக்சர்ஸ் தயாரித்த 4 படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இது சன் பிக்சர்ஸுடன் அவர் இணையும் 5வது படமாகும். மேலும் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இணையும் முதல் படம் இது. இந்த காரணங்களால் இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

The post ரஜினி – சன் பிக்சர்ஸ் இணையும் 5வது படம் அறிவிப்பு: லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sun Pictures ,Lokesh Kanagaraj ,Chennai ,Rajinikanth ,Nelson ,Anirudh ,Sun Pictures' ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ்...