×

குழந்தை தத்தெடுப்பு சம்பவம் ஆர் யூ ஓகே பேபி

சென்னை: கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடித்துள்ள படம், ‘ஆர் யூ ஓகே பேபி?’. வரும் 22ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் அபிராமி, மிஷ்கின், அனுபமா குமார், ‘முருகா’ அசோக், லட்சுமி ராமகிருஷ்ணன், ‘ஆடுகளம்’ நரேன், பாவெல் நவகீதன், ரோபோ சங்கர், வினோதினி வைத்தியநாதன், கலைராணி, முல்லையரசி நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைக்க, டி.எஸ்.கிருஷ்ணசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ளார். படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது: சமீபத்தில் நான் கேட்ட ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன். ஒரு குற்றத்தின் சமூக மற்றும் சட்ட அம்சங்களை பற்றிய விவாதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை கண்டிப்பாக இந்த சமூகத்துக்கு சொல்லப்பட வேண்டிய ஒன்று. இதற்கு முன்பு நான் இயக்கிய ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’, ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய படங்களுக்கும், இப்படத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். குழந்தைகள் தத்தெடுப்பு குறித்தும், அதற்குப் பிறகான சட்டரீதியான பிரச்னைகள் குறித்தும் இப்படம் விரிவாகப் பேசுகிறது. இளையராஜா எழுதி இசை அமைக்க, ஸ்வேதா மோகன் பாடிய ‘அன்னை தந்தை ஆக்குவது யார்? பிள்ளை அன்றோ’ என்ற பாடலைக் கேட்டு சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்த அபிராமி மற்றும் ‘ஆடுகளம்’ நரேன் மனமுருகி அழுததைப் பார்த்து நானும் அழுதேன்.

The post குழந்தை தத்தெடுப்பு சம்பவம் ஆர் யூ ஓகே பேபி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Samuthirakani ,Lakshmi Ramakrishnan ,Abhirami ,Myshkin ,Anupama Kumar ,Muruga ,Ashok ,Lakshmi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘ராமம் ராகவம்’ படத்துக்கு டப்பிங்...