×

கங்கனாவுக்கு ஜோதிகா பாராட்டு‘நீங்கள் கவர்ச்சியாக இருக்கிறீர்கள்’

சென்னை: ‘சந்திரமுகி 2’ படத்தில் சந்திரமுகி கேரக்டரில் நடித்துள்ள கங்கனா ரனவத்தைப் பாராட்டி ஜோதிகா வாழ்த்து தெரிவித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இப்படம், வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 15ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. இதில் சந்திரமுகி வேடத்தில் நடித்துள்ள கங்கனா ரனவத்தின் தோற்றம் மற்றும் கேரக்டர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகி கேரக்டரில் நடித்திருந்த ஜோதிகா, ‘சந்திரமுகி 2’ படத்தில் ஒரிஜினல் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனவத்தைப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனவத், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை அறிந்து மிகவும் பெருமைப்படுகிறேன். சந்திரமுகி கேரக்டரில் நீங்கள் கவர்ச்சியாக தோற்றம் அளிக்கிறீர்கள். நான் உங்கள் ரசிகை. இப்படத்தில் உங்கள் நடிப்பைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குனர் பி.வாசுவுக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக கங்கனா ரனவத், ‘நான் ஜோதிகாவின் ரசிகை. அவர் நடித்த சில படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். இதுவரை நான் அவரை நேரில் சந்தித்தது இல்லை’ என்று சொல்லியிருந்தார்.

The post கங்கனாவுக்கு ஜோதிகா பாராட்டு‘நீங்கள் கவர்ச்சியாக இருக்கிறீர்கள்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jyothika ,Kangana ,Chennai ,Kangana Ranaut ,Chandramukhi ,Laika Productions ,Subhaskaran ,P. Vasu ,Raghava Lawrence ,Ganesha Chaturthi ,Jyotika ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்சார் கெடுபிடி எதிரொலி; கங்கனாவின் எமர்ஜென்சி நாளை ரிலீசாகவில்லை