×

ஒப்பந்ததாரரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு

ஆவடி: பட்டாபிராம், காந்தி நகர், 2வது தெருவை சேர்ந்தவர் நாகராஜன்(44), நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர். நேற்று முன்தினம் இரவு வண்டலூர் – மீஞ்சூர் 400 அடி வெளிவட்டச்சாலை வெள்ளானூர் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மொபட்டில் வந்த 3 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர். அதில், ஒருவர் நாகராஜிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றார். அவர் கொடுக்க மறுத்தார். இதனால் 3 பேரும் கத்தியை எடுத்து நாகராஜை தலையில் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து, நாகராஜன் பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அக்கம் பக்கத்தினர் நாகராஜனை மீட்டு ஆவடி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் 3 வாலிபர்களை தேடுகின்றனர்….

The post ஒப்பந்ததாரரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Awadi ,Nagarajan ,Battapram, Gandhi Nagar, 2nd Street ,Vandalur ,Dinakaran ,
× RELATED திருச்சியில் டிரைவரை தாக்கியவர் கைது