×

அனுஷ்காவின் சவாலை ஏற்றார் பிரபாஸ்

ஐதராபாத்: ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தில் அனுஷ்கா சமையல் கலை நிபுணர் வேடத்தில் நடித்திருக்கிறார். இதனை ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் புதுமையான முயற்சியாக ஹேஷ்டேக் சமையல் குறிப்பு சவால் ஒன்றை அனுஷ்கா முன்னெடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனக்கு பிடித்த உணவினையும், அதற்கான செய்முறை குறிப்பையும் பகிர்ந்து கொண்டு, இந்த சவாலை அனைவரும் பின் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இந்த முயற்சியை உணவின் மீதும் விருந்தோம்பல் மீதும் பேரன்பு கொண்ட பிரபாஸுடன் சவாலை தொடங்க விரும்புகிறேன் எனவும் பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து பிரபாஸ் தனக்கு விருப்பமான ரொய்யாலா புலாவ் (இறால் புலாவ்) எனும் உணவை தயாரிக்கும் செய்முறையை விரிவாகவும், ரசனையுடனும் விவரித்து அதனை சமூக ஊடகங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டார். அத்துடன் இந்த சமையல் குறிப்பு சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மற்றொரு முன்னணி நட்சத்திர நடிகரான ராம் சரணை டேக் செய்து, அவரிடமும் கேட்டுக் கொண்டார்.

The post அனுஷ்காவின் சவாலை ஏற்றார் பிரபாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabhas ,Anushka ,Hyderabad ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிரபாஸ் கல்யாணம் பண்ணிக்காதது ஏன்? ராஜமவுலி புது பதில்