×

கொரில்லாவுடன் நடித்த அஞ்சலி

பாங்காக்: படத்துக்காக நிஜ கொரில்லாவுடன் நடித்துள்ளார் அஞ்சலி. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியரா அத்வானி நடிக்கும் கேம் சேஞ்சர் தெலுங்கு படத்தில் அஞ்சலி நடிக்கிறார். இதையடுத்து ஈகை என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இது அஞ்சலியின் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படமாகும். இதில் சில காட்சிகளில் கொரில்லாவுடன் அஞ்சலி நடிக்க வேண்டும். இதற்காக படக்குழுவுடன் பாங்காக் சென்று அந்த காட்சிகளை படமாக்கி வந்துள்ளார் அஞ்சலி. இதற்கு முன் கொரில்லா என்ற படத்தில் நிஜ கொரில்லாவுடன் ஜீவா நடித்திருந்தார். அந்த படத்துக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் கொரில்லா பயன்படுத்தியுள்ளனர்.

The post கொரில்லாவுடன் நடித்த அஞ்சலி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anjali ,Gorilla ,Shankar ,Ramcharan ,Kiara Advani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும்...