×

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் செயல் அலுவலரின் பணியை தடுத்த 4 பேர் மீது வழக்கு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் உற்சவம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையறிந்து காஞ்சிபுரம் ஆர்டிஓ வித்யா, தாசில்தார் பவானி, டி.எஸ்.பி. மணிமேகலை ஆகியோர் கோயிலுக்கு சென்று சமசர பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து,  கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், இரு தரப்பினரும் வேதபாராயணம் பாட வேண்டாம். கோயிலில் நடக்கும் உற்சவத்தின்போது தீபாராதனை மட்டுமே சுவாமிக்கு நடத்தப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், விஷ்ணு காஞ்சி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதில், வரதராஜப் பெருமாள் கோயில் உற்சவத்தின்போது, என்னை பணியை செய்ய விடாமல் வடகலை பிரிவை சேர்ந்த வாசுதேவன், ரங்கராஜன், சீனிவாசன், மாலோணன் ஆகியோர் தடுத்தனர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் செயல் அலுவலரின் பணியை தடுத்த 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Varadaraja Perumal temple ,Kanchipuram ,English New Year ,Varadaraja Perumal Temple ,Vadakalai ,Kanchipuram Varadaraja ,Perumal ,Temple ,
× RELATED காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்...