×

காமெடியை விரும்பும் தான்யா

சென்னை: பெங்களூருவை சேர்ந்தவர், தான்யா ஹோப். கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடிக்கும் அவர், தமிழில் அருண் விஜய்யுடன் ‘தடம்’, ஹரீஷ் கல்யாணு டன் ‘தாராள பிரபு’, விமலுடன் ‘குலசாமி’, சந்தானத்துடன் ‘கிக்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரும் ‘வல்லான்’, ‘கோல்மால்’ ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து தமிழில் நடிப்பதற்காக தமிழ் பேச கற்றுக்கொண்ட அவர், திடீரென்று தனது உதடுகளை அறுவை சிகிச்சை மூலம் அழகுபடுத்திக் கொண்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘திரைக்கு வந்த ‘கிக்’ படத்தில் முதல்முறையாக சந்தானத்துடன் இணைந்து காமெடி செய்தேன்.

அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து காமெடி கலந்த வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்நிலையில், திடீரென்று என்னிடம் சிலர், எனது உதடுகள் பெரிதாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை மூலம் உதடுகளை அழகுபடுத்திக் கொண்டேனா என்றும் சீரியசாக கேட்கின்றனர். எனது உதடுகளின் அழகுக்காக நான் அறுவை சிகிச்சை எதுவும் செய்யவில்லை. இயல்பாகவே எனது உதடுகள் இப்படித்தான் இருக்கின்றன. இந்தியர்களுக்கு உதடுகள் பெரிதாக இருப்பது வழக்கம். என்னிடம் மட்டும் எதற்காக இப்படி கேட்கின்றனர் என்று நிஜமாகவே தெரியவில்லை. இனி அதுபற்றி கேட்கவே வேண்டாம்’ என்றார்.

The post காமெடியை விரும்பும் தான்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tanya ,CHENNAI ,Tanya Hope ,Bengaluru ,Arun Vijay ,Harish Kalyanu ,Vimal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பெண்களின் கேரக்டர்கள் வலிமையாக இருக்கும்: ‘ரணம்’ பற்றி வைபவ்