×

நடிகை தூக்குபோட்டு தற்கொலை

திருவனந்தபுரம்: மலையாள சினிமா மற்றும் டிவி நடிகை அபர்ணா நாயர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருவனந்தபுரம் கரமனை தளியில் பகுதியைச் சேர்ந்தவர் அபர்ணா நாயர் (36). பிரபல நடிகை. மேக தீர்த்தம், முத்துகவு, அச்சாயன்ஸ், கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல், கல்கி உள்பட மலையாளப் படங்களிலும், ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்ததும் அவரது வீட்டில் இருந்த தாயும், தங்கையும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பக்கத்து வீட்டினரின் உதவியுடன் அபர்ணா நாயரை மீட்டனர். பின்னர் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அபர்ணா நாயர் இறந்து விட்டதாக கூறினர். இதைகேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். அபர்ணா நாயருக்கு, ரஞ்சித் என்ற கணவரும், 2 மகள்களும் உள்ளனர். இதுகுறித்து கரமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நடிகை தூக்குபோட்டு தற்கொலை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Thiruvananthapuram ,Aparna Nair ,Karamanai Thilliil ,Megha Theertha ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கொல்லம் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை