×

அறுவை சிகிச்சை செய்கிறேனா?..பூஜா ஹெக்டே பதில்

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர், விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தின் போது இவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த வருடம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இருப்பினும் வலி குறையாததால் மீண்டும் பூஜா ஹெக்டே ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் பரவியது.

ஆனால் இதை பூஜா ஹெக்டே மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ‘காலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுவிட்டது. அதற்கு போன வருடமே அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போது ஏன் இதை சிலர் புரளியாக கிளப்புகிறார்கள் என தெரியவில்லை. நான் நலமாக இருக்கிறேன். சினிமாவுக்கு பிரேக் எடுப்பதாக சிலர் பொய்யான தகவலை பரப்புகிறார்கள். இப்போது கூட இந்தி படத்தின் படப்பிடிப்பில்தான் இருக்கிறேன். நல்லது செய்ய முடியாவிட்டாலும் கெட்டது செய்யாமல் இருங்கள் என மீடியாவை கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

The post அறுவை சிகிச்சை செய்கிறேனா?..பூஜா ஹெக்டே பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Pooja Hegde ,Chennai ,Mishkin ,Vijay ,Radhe ,Prabhas ,Kollywood Images ,
× RELATED கஞ்சா சங்கர் பூஜா ஹெக்டே படத்துக்கு எச்சரிக்கை