×

டிஜிட்டல் விவசாயத்துக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: வேளாண்மை துறை செயலாளர் சமயமூர்த்தி பேட்டி

வேளாண் பட்ெஜட்டில் டிஜிட்டல் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதுஎன்று வேளாண்மை துறை செயலாளர் சமய மூர்த்தி கூறியுள்ளார். தமிழகத்தில் எல்லோரிடமும் செல்போன் உள்ளது. அதனால் அனைத்து சேவைகளும் செல்போன் மூலம் எளிமையாக கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே, இந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் விவசாயிகள் விளைபொருட்களை முன்பதிவு செய்ய முடியும். தென்னங்கன்று உற்பத்தி செய்ய 7 மாதங்கள் வரை ஆகும். விவசாயிகளுக்கு தென்னங்கன்று கிடைக்காமலோ, விவசாயிகள் கேட்கும் நேரங்களில் தென்னங்கன்றை கொடுக்க முடியாமல் அதிகாரிகளும் சிரமப்படுவதால், அதனை முன்பதிவு மூலம் தவிர்க்கலாம்.அதுமட்டுமல்லாமல் அரசு திட்டங்களை ஆன்-லைன் மூலம் தெரிந்து கொண்டு பயன்பெறவும் வழிவகை ஏற்படும். விவசாயிகளில் பெரும்பாலானோர் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் அவர்களால் டிராக்டர் மற்றும் பெரிய உபகரணங்களை வாங்க இயலாது. அதனால் சிறிய வகை உழவு இயந்திரங்கள் உள்ளிட்டவை வழங்கவும், உற்பத்தி செய்த பொருளை பதப்படுத்தி, மதிப்புக்கூட்டி, சந்தைப்படுத்தவும் பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனால் படிப்படியாகத்தான் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்.தமிழகத்தில் நீரா பானம் தயாரிக்க 7 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.நெல் கொள்முதல், பருத்தி இயக்கம்: நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் சாகுபடியுடன், கறவை மாடு, ஆடுகள், நாட்டுக்கோழிகள், தீவனப்பயிர்கள், மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து தோட்டம் ஆகிய வேளாண் தொடர்பான பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு தொகுப்பிற்கு ₹50 ஆயிரம் மானியம் வீதம், 13 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் ₹65 கோடியே 65 லட்சம் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.* 2022-23ம் ஆண்டில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் பருத்தியின் உற்பத்தியை உயர்த்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம், ₹15 கோடியே 32 லட்சம் செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் இயற்கை முறை பருத்தி சாகுபடியும் ஊக்குவிக்கப்படும்.* 2022-23ம் ஆண்டில் 19 லட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொண்டு, உயர் விளைச்சல் பெற, ஒன்றிய, மாநில திட்டங்கள் வாயிலாக சீர்மிகு நெல் சாகுபடித் திட்டம் மொத்தம் ₹32 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.ஊறுகாய் புல் உற்பத்தி: கால்நடைகளின் உற்பத்தித்திறன் குறைவாக இருப்பதற்கு முதன்மைக் காரணம் தீவனப் பற்றாக்குறை ஆகும். மாநிலத்தின் பசுந்தீவனப் பற்றாக்குறை சுமார் 240 லட்சம் மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த பசுந்தீவன இயக்கம் செயல்படுத்தப்படும். இதன் கீழ், கிராமப்புறங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் தொழில்முனைவோர்களாக மாறி, வணிக ரீதியாக பசுந்தீவன உற்பத்தியை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, ஆண்டுக்கு மூன்றாயிரம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக ‘ஊறுகாய் புல்’ உற்பத்தி செய்யும் அமைப்பை நிறுவுவதற்கு, 2022-23ம் ஆண்டில் அமைப்பு ஒன்றுக்கு ₹10 லட்சத்து 50 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இதற்கென ₹42 லட்சம் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்படும். பழத் தோட்டங்களில் ஊடுபயிர் முறையில் தீவனப் பயிர்கள் சாகுபடி மேற்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, 2 ஆயிரம் ஏக்கரில் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதற்கு, 2022-23ம் ஆண்டில் 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்….

The post டிஜிட்டல் விவசாயத்துக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: வேளாண்மை துறை செயலாளர் சமயமூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Agriculture Department ,Samayamurthy ,Samaya Murthy ,Tamil Nadu ,
× RELATED புராதன சின்னங்களை விளக்கும் வகையில் ₹5...