×

ரஜினி 170வது படத்தில் ராணா, துஷாரா

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 10ம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனைகள் புரிந்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரஜினி தனது 170-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை சூர்யாவின் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கவுள்ளார். அத்துடன் படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் நடிகர்கள் தேர்வையும் இயக்குனர் நடத்தி வருகிறார்.

இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் நானி இதில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அவருக்குப் பதிலாக சர்வானந்த் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் ராணா நடிக்க இருக்கிறார். மற்றொரு முக்கிய கேரக்டரில் துஷாரா விஜயன் நடிக்கிறார். ரஜினி 170 என்று கூறப்படும் இந்த படத்தின் டைட்டில் ‘வேட்டையன்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

The post ரஜினி 170வது படத்தில் ராணா, துஷாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rana ,Dushara ,Rajini ,Chennai ,Rajinikanth ,Nelson Dilipkumar ,Tushara ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி