×

லாஸ் ஏஞ்சல்ஸில் விஜய்: ஹாலிவுட் கலைஞர்களை சந்திக்கிறார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்கா சென்றுள்ள நடிகர் விஜய், ஹாலிவுட் மேக்அப் கலைஞர்களை சந்திக்க உள்ளார். லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் ஓய்வுக்காக வெளிநாடு சென்றிருந்தார் விஜய். இந்நிலையில் அவர் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு இரட்டை வேடம். தந்தை, மகனாக அவர் நடிக்கிறார். இதில் தந்தை கேரக்டருக்காக வயதான கெட்அப்பில் விஜய் தோன்றுவார். அதனால் இதற்கு முன் நடித்த வயதான கெட்அப் போல் இல்லாமல், இந்த முறை வித்தியாசமான தோற்றத்தில் அவரை நடிக்க வைக்க வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளார். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா, வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றனர்.

வேறொரு நாட்டில் இருந்த விஜய், நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு வந்தடைந்தார். அங்கு அவர் விமான நிலையத்தில் நின்றிருந்தபோது, ரசிகர்கள் சிலர் அவரை செல்போனில் படம் எடுத்தனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சில நாட்கள் லாஸ்ஏஞ்சல்ஸில் தங்கும் விஜய், ஹாலிவுட் மேக்அப் கலைஞர்களை சந்திக்கிறார். அங்கு அவருக்கு மேக்அப் ெடஸ்ட் நடத்தப்படுகிறது. நான்கு, ஐந்து கெட்அப்களில் விஜய்யின் தோற்றத்தை மாற்ற அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் எந்த கெட்அப் அவருக்கு பொருந்துகிறதோ அதை தேர்வு செய்ய உள்ளனர்.

The post லாஸ் ஏஞ்சல்ஸில் விஜய்: ஹாலிவுட் கலைஞர்களை சந்திக்கிறார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay ,Los Angeles ,America ,Hollywood ,Venkat Prabhu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியாவின் எதிர்காலம் இந்திய...