×

தலைவர்170 படத்தில் இணையும் துஷாரா மற்றும் ராணா

ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், நானி, சர்வானந்த் என பலர் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

தற்போது பாகுபலி படத்தில் நடித்த வில்லன் ராணா மற்றும் சார்பட்டா பரம்பரையில் நடித்த துஷாரா விஜயன் ஆகியோரும் இணைந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு, ரஜினி 170 வது படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், 10 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post தலைவர்170 படத்தில் இணையும் துஷாரா மற்றும் ராணா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tushara ,Rana ,Pheedana 170 ,Jailer ,Rajinikanth ,Gnanavel ,Anirudh ,Lyca ,Amitabh Bachchan ,Bahad Basil ,Nani ,Sarvanand ,Dushara ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தகுதி நீக்க எம்எல்ஏ பரபரப்பு; இன்னும் 9...