×

கோவை அருகே ஆண் யானை பலி ஆந்த்ராக்ஸ் பாதிப்பா? வனத்துறையினர் ஆய்வு

கோவை : கோவை தடாகம் அருகே வனத்தில் இறந்து கிடந்த 30 வயது ஆண் யானை ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பின் காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வனத்துறையினர் யானையின் மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் தெற்கு சுற்று சலீம் அலி சராக வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணி மேற்கொண்டு இருந்தனர். அப்போது, வனத்தில் இறந்த நிலையில் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டறிந்தனர். இது தொடர்பாக மாவட்ட வனஅலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவரின் உத்தரவின்பேரில் யானையின் உடலை முதுமலை வனத்துறை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது, யானையின் வாய் மற்றும் ஆசனவாய் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறி இருந்தது. இதனால், ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பினால் யானை இறந்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து, கவச உடை அணிந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் யானையின் உடலை கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து, ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். மேலும், யானையின் ரத்த மாதிரிகள் ஆய்வு முடிவுகளின்படி யானையின் உடல் இன்று பரிசோதனை செய்ய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். யானை இறந்த இடத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, கடந்த ஆண்டு இதே பகுதியில் வனத்துறையினர் ஆய்வின்போது பெண் யானை ஒன்று ஆந்த்ராக்ஸ் பாதிப்பினால் உயிரிழந்தது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post கோவை அருகே ஆண் யானை பலி ஆந்த்ராக்ஸ் பாதிப்பா? வனத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Govai ,Govai Tadagam ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!