×

சென்னை வேப்பேரியில் மழை, வெள்ள சீரமைப்பு, சாலை புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை மாநகரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிலிட்டு நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். சென்னை வேப்பேரியில் உள்ள பிரதான சாலையான ராஜா முத்தய்யா சாலை, அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மழை, வெள்ள காலத்தில் சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்வாய்களை முறையாக தூர்வாராததால் பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. அச்சமயம் முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் பல்வேறு இடங்களுக்கு சென்று தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டார். அடுத்த ஆண்டில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், தற்போது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை முதல்வர் நேரடியாக ஆய்வு நடத்தி வருகிறார். இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி முதலமைச்சருக்கு விளக்கம் அளித்து வருகிறார். இந்த ஆய்வில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து சென்னையில் 4 இடங்களில் முதலமைச்சர் நேரில் ஆய்வு நடத்தவுள்ளார்….

The post சென்னை வேப்பேரியில் மழை, வெள்ள சீரமைப்பு, சாலை புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Veperi, Chennai ,Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு