×

தேவிஸ்ரீ பிரசாத்துக்கு இளையராஜா வாழ்த்து

சென்னை: 2023ம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 24ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை ‘புஷ்பா’ படத்தின் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பெற்றார். இந்நிலையில் தேவிஸ்ரீ பிரசாத், இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்தார். அவர், இளையராஜாவின் தீவிர ரசிகர்.

எனவே, சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் இளையராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சென்ற அவர், இளையராஜாவின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அவரை இளையராஜா வாழ்த்தினார். இதுபற்றி தேவிஸ்ரீ பிரசாத் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘தேசிய விருது பெற என்னை உற்சாகப்படுத்திய இளையராஜாவுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தேவிஸ்ரீ பிரசாத்துக்கு இளையராஜா வாழ்த்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ilayaraja ,Devisree Prasad ,Chennai ,69th National Film Awards ,Devishree Prasad ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி