×

கிரிமினல் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: தக்‌ஷிணா மூர்த்தி இயக்கத்தில் கவுதம் கார்த்திக், சரத்குமார் இணைந்து நடித்துள்ள படம், ‘கிரிமினல்’. பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி.கார்த்திகேயன் தயாரித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், நேற்று பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படம் குறித்து தக்‌ஷிணா மூர்த்தி கூறுகையில், ‘நான் இயக்குனராக முயற்சித்தபோது சில கதைகள் வைத்திருந்தேன். அவற்றைப் படமாக்க நிறைய தடைகள் ஏற்பட்டது. அப்போது டீக்கடையில் அமர்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு விஷயம் தோன்றியது.

அதுதான் ‘கிரிமினல்’ படத்தின் கதை ஆரம்பித்த புள்ளியாகும். தயாரிப்பாளர்களுக்கு கதை பிடித்திருந்ததால், உடனே கவுதம் கார்த்திக், சரத்குமாரை ஒப்பந்தம் செய்தோம். மதுரை மாநகரில் நடக்கும் க்ரைம் திரில்லரை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில், மதுரையை சேர்ந்த பலர் சொந்தக்குரலில் பேசி நடித்துள்ளனர்’ என்றார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார்.

The post கிரிமினல் பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dakshina Murthy ,Gautham Karthik ,Sarathkumar ,Meenakshi Sundaram ,Barsa Pictures ,IP ,Karthikeyan ,Big Print Pictures ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.....