×

ரஜினிக்கு வில்லன் ஆகிறார் பகத் பாசில்

சென்னை: ‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது அடுத்த படத்தில் செப்டம்பர் முதல் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் முக்கிய வேடத்தில் நடிக்க நானியிடம் பேசப்பட்டது. கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இப்போது அந்த வேடத்தில் சர்வானந்த் நடிக்கிறார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடிக்கிறார். இதில் வில்லனாக நடிக்க பகத் பாசில் தேர்வாகியுள்ளார்.

கமலுடன் ‘விக்ரம்’ படத்தில் நடித்த பகத் பாசில், முதல்முறையாக ரஜினியுடன் நடிக்க உள்ளார். மேலும் இதில் ரஜினியின் கேரக்டர் போலீஸ் ஆபீஸராக இருக்கப் போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இமயமலை சென்று திரும்பி வந்த ரஜினி அடுத்த கட்ட வேலையாக இப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி விட்டார். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு மற்றும் அனைத்து வேலைகளும் கூடிய விரைவில் நடக்க இருக்கிறது. தூக்கு தண்டனைக்கு எதிராக போராடும் வேடத்தில் ரஜினி நடிக்க உள்ளாராம். இந்நிலையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

The post ரஜினிக்கு வில்லன் ஆகிறார் பகத் பாசில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bhagat Basil ,Rajini ,Chennai ,Rajinikanth ,T. S. Gnanavel ,Anirudh ,Leica ,Nani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்த ரஜினியால் பரபரப்பு