×

சான்பிரான்சிஸ்கோவில் சமந்தாவுக்கு தீவிர சிகிச்சை

நியூயார்க்: மயோசிடிஸ் நோய்க்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் சமந்தா. ஓராண்டுக்கு முன்பாக படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார் சமந்தா. இது தொடர்பாக அவர் சிகிச்சை மேற்கொண்டபோது, மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் அவர் குணமாகவில்லை. இந்நிலையில் சினிமாவுக்கு பிரேக் கொடுத்துவிட்டு, அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்தார். இதில் அவரது உடல் நிலை சிறிது தேறியது. இதையடுத்து மீண்டும் இந்தியா திரும்பி, படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மீண்டும் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அடிக்கடி மயங்கி விழுந்து வந்தார். இதனால் டாக்டர்களின் ஆலோசனைப்படி, சில தினங்களுக்கு முன் சமந்தா அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஐஸ்பாத் தெரபி அவருக்கு தரப்படுகிறதாம். அத்துடன் தசை பிடிப்பு நீக்குவதற்கான சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது. சமந்தாவுடன் அவரது அம்மா உடன் இருக்கிறார்.

The post சான்பிரான்சிஸ்கோவில் சமந்தாவுக்கு தீவிர சிகிச்சை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samantha ,San Francisco ,New York ,US ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED உடல்நலம் குறித்த டிப்ஸ் வழங்க யூடியூப் சேனல் தொடங்கினார் சமந்தா