×

‘பரம்பொருள்’ 2ம் பாகம் உருவாகும்: சரத்குமார் தகவல்

சென்னை: கவி கிரியேஷன்ஸ் சார்பில் மனோஜ், கிரிஷ் தயாரித்துள்ள படம், ‘பரம்பொருள்’. இயக்குனர் ராம் உதவியாளர் சி.அரவிந்த் ராஜ் இயக்கியுள்ளார். சரத்குமார், அமிதாஷ், காஷ்மீரா பர்தேசி, பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி.சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லத்துரை நடித்துள்ளனர். ‘ரிச்சி’ பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை, சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். படம் குறித்து சரத்குமார் கூறியதாவது: இக்கதையை இயக்குனர் என்னிடம் சொன்னவுடன் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். பழங்காலச் சிலைகள் கடத்தல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், முதலில் சின்ன பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்டு, பிறகு தயாரிப்பாள‌ர்களின் ஆதரவால் பெரிய பட்ஜெட்டுக்கு மாறியது.

நாங்கள் எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக வந்துள்ளது. தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டிய தொழில்நுட்பங்களுடன், அனைவரும் கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கியுள்ளோம். ‘போர் தொழில்’ படத்தின் ஜானருக்கும், இதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். சிலை கடத்தலை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். எனக்கும், அமிதாஷுக்குமான மோதல் ஒவ்வொரு காட்சிக்கும் மாறிக்கொண்டே இருக்கும். ‘பரம்பொருள்’ 2ம் பாகத்துக்காக லீட் கிளைமாக்ஸில் இடம்பெற்றுள்ளது. அதுபற்றி இயக்குனர் முடிவு செய்வார்.

The post ‘பரம்பொருள்’ 2ம் பாகம் உருவாகும்: சரத்குமார் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sarathkumar ,CHENNAI ,Manoj ,Girish ,Kavi Creations ,Ram Assistant ,C. Arvind Raj ,Amitash ,Kashmira Bardesi ,Balaji Sakthivel ,Charles Vinod ,T. Siva ,Vincent Asogan ,Gajraj ,Balakrishnan ,Bhava Chelathurai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கையை வலுப்படுத்தக் கோரிய ராதிகா: காங்....