×

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் பற்றி விவாதிக்க அடுத்த வாரம் நேட்டோ அமைப்பின் அவசர கூட்டம்: பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் அறிவிப்பு

பிரஸ்ஸல்ஸ்: உக்ரைன் மீதான ரஷியாவின் போர் பற்றி விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் தலைமையில் நேட்டோ அமைப்பின் கூட்டம் அடுத்த வாரம் பெல்ஜியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ அமைப்ப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் வருகின்ற 24-ம் தேதி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேட்டோ அமைப்ப்பின் அவசர கூட்டம் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார். 30 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ-பைடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவுகளை பற்றி பேச இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் ரஷ்ய படைகளின் தொடர் குண்டு வீச்சுக்கு மத்தியில் செக், போலந்து மற்றும் ஸ்லோவேனியா நாடுகளின் பிரதமர்கள் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசியுள்ளனர். செக் குடியரசு பிரதமர் பெட்ர் ஃபியாலா, போலந்தின் பிரதமர் மடெஉச்ஸ் மொராவியேக்கி, ஸ்லோவேனியா பிரதமர் ஜேன்ஸ் ஜான்சா ஆகியவர்கள் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் பிரதமர் டெனிஸ் ஆகியவர்களை தலைநகர் கீவில் சந்தித்து பேசிய காட்சிகளை உக்ரைன் வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கு 3 நாடுகளும் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தி இருப்பதாக கூறியிருக்கும் உக்ரைன் அரசு அவர்களிடம் அதிபர் ஜெலன்ஸ்கி போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதித்ததாக கூறியுள்ளது. …

The post உக்ரைன் மீதான ரஷியாவின் போர் பற்றி விவாதிக்க அடுத்த வாரம் நேட்டோ அமைப்பின் அவசர கூட்டம்: பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : NATO Organization ,Russia ,General Minister ,Jens Stoltenberg ,Brussels ,NATO ,US ,President ,Jo-Byden ,Ukraine ,Dinakaran ,
× RELATED மழைக்காலம் வந்தாச்சு ரயிலில் ஒழுகும்...