×

தேசிய பங்கு சந்தை முறைகேடு புகார் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மேலும் 14 நாள் காவல்

புதுடெல்லி: என்எஸ்இ முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பங்கு சந்தையின்(என்எஸ்இ) நிர்வாக இயக்குனராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர்  ஒரு இமயமலை சாமியாரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று ‘‘கோ-லொகேஷன்” வசதியை பயன்படுத்தி முறைகேடு செய்ததாக, கடந்த 6ம் தேதி சிபிஐ கைது செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது சித்ராவை 7 நாள் காவலில் விசாரிக்க சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டார்.  நீதிமன்ற காவல்  முடிவடைதையொட்டி நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முறைகேட்டில்,பங்கு தரகர்களின் சதி,என்எஸ்இ அதிகாரிகளுக்கு உள்ள பங்கு ஆகியவை குறித்து சித்ராவை 14 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கேட்டு கொண்டது. இதையடுத்து சித்ராவை மேலும் 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது….

The post தேசிய பங்கு சந்தை முறைகேடு புகார் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மேலும் 14 நாள் காவல் appeared first on Dinakaran.

Tags : Chitra Ramakrishna ,National Stock Exchange ,New Delhi ,NSE ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2507.47 புள்ளிகள் உயர்வு..!!