×

அஜித்துடன் நடிக்க ஆசை: சிவராஜ்குமார் நெகிழ்ச்சி

பெங்களூரு: அஜித்துடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் சிவராஜ்குமார். கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார். அவர் கூறியது: தமிழ் சினிமாவில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது முதல் விருப்பமாக இருந்தது. அது ‘ஜெயிலர்’ படம் மூலம் நிறைவேறியது. படத்தின் மெகா வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இளம் ஹீரோக்களில் யாருடன் சேர்ந்து நடிக்க ஆசை என கேட்கிறார்கள். அஜித் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவர் எந்த ஹீரோயிச பந்தாவும் இல்லாமல், சுதந்திர காற்றை சுவாசிக்க அடிக்கடி பைக்கில் உலக பயணம் செல்வது நல்ல விஷயம். அதை பார்த்து நான் வியந்து இருக்கிறேன். அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அது நடக்குமா என தெரியவில்லை.
அஜித் நடித்த படங்களில் ‘விஸ்வாசம்’ எனக்கு பிடித்த படம். அதுபோன்ற ஒரு கன்னட படத்தில் நடிக்கவும் ஆசை இருக்கிறது. இவ்வாறு சிவராஜ்குமார் கூறினார்.

The post அஜித்துடன் நடிக்க ஆசை: சிவராஜ்குமார் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajith ,Sivarajkumar Leschi ,Bengaluru ,Sivarajkumar ,Rajini ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மாஜி விளையாட்டு வீரர் ஓய்வூதியம் பெற அழைப்பு