×

நீட் விலக்கு தொடர்பாக சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். நீட் விலக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதா தொடர்பான சந்திப்பாகவே தற்போது பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மக்கள் நவாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் உயர் அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு செப்டெம்பர் 13-ம் தேதி நீட் விலக்கு தொடர்பான மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் 142 நாட்களுக்கு பின்னர் அந்த மசோதாவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என கூறி திருப்பி வைத்துள்ளார். அவ்வாறான சூழலில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு அதன் அடைப்படையில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட்டு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த நீட் விலக்கு மசோதாவிற்காவது ஆளுநர் உரிய முடிவை எடுக்க படவேண்டும் என்பதை முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். மற்ற கட்சியை சார்ந்தவர்களும் நீட் விளக்கு தொடர்பான ஒரு விரிவான விளக்கத்தையும் அளித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், ஆளுநர் அது தொடர்பாக எந்த நிலைப்பாட்டில் உள்ளார் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் 2-வது முறையாக அந்த சட்ட மசோதா அனுப்பப்படும் பொழுது ஆளுநர் அதனை திருப்பி அனுப்பாமல் குடியரசு தலைவருக்கு ஆனுப்பிவைக்கவேண்டியது தான் அவசியம் என வலியுறுத்தப்பட்டிருந்தது. 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தொடர்பான ஆளுநரின் நிலைப்பாடு குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது நீட் விலக்கு மசோதா தொடர்பாக விவாதிக்கப்பட்டதற்கு பின்பாக அதிகார பூர்வ செய்தி அறிக்கை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. …

The post நீட் விலக்கு தொடர்பாக சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Governor ,R.R. N.N. Rawi ,Tamil Nadu ,Chief Minister ,Mu.R. G.K. Stalin ,Chennai ,G.K. Stalin ,Governor R. My Ravi ,Rajbhavan ,Chennai Kindi ,R.R. ,N.N. Rawi ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...