×

மாணவியை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது

திருவள்ளூர்: திருமழிசை புது வட்டாரம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி. இவரது மகன் யுவராஜ்(20). இவர் வேலை ஏதும் இன்றி ஊர் சுற்றி வந்தார். இந்நிலையில், யுவராஜ், மேல்ணம்பேடு கிராமத்தை சேர்ந்த 15 வயதான 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து 2 பேரும் தனியாக அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். அப்படி 2 பேரும் பேசுவதை யுவராஜ் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து அந்த மாணவியை மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார் யுவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்….

The post மாணவியை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Umapati ,Tirumazhisai Pudu Vattaram ,Yuvraj ,
× RELATED திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!