×

இதுவரை 1,300 உக்ரைன் வீரர்கள் பலி; அதிபர் ஜெலென்ஸ்கி தகவல்

கீவ: இதுவரை 1,300 உக்ரைன் வீரர்கள் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய நாடுகளின் காணொலி மாநாட்டில் பேசுகையில், ‘பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்திய தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 1,300 உக்ரைன் வீரர்கள் பலியாகினர். தலைநகர் கீவ் மீது கார்பெட் வெடிகுண்டுகளை வீசு ரஷ்யா திட்டமிட்டுள்ளது. கீவ் நகரத்தை கைப்பற்றுவதற்காக அங்கு வசிக்கும் மக்களை ரஷ்யப் படைகள் கொன்று வருகின்றன’ என்றார். இதற்கிடையே உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உக்ரைன் படைகள் நடத்திய பதிலடி தாக்குதலில் 12,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர். 1,205 கவச வாகனங்கள், 58 விமானங்கள், 83 ஹெலிகாப்டர்கள், 362 டாங்கிகள், 585 வாகனங்கள் மற்றும் 135 பீரங்கிகள் அழிக்கப்பட்டன’ என்றார். இதற்கிடையே ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பிப்ரவரி 24 அன்று போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனில் குறைந்தது 579 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 1,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post இதுவரை 1,300 உக்ரைன் வீரர்கள் பலி; அதிபர் ஜெலென்ஸ்கி தகவல் appeared first on Dinakaran.

Tags : President ,Zelensky ,Kyiv ,Dinakaran ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!