×

சாதிகளை ஒழிக்கும் படம் ‘தமிழ்க்குடிமகன்’: சேரன்

சென்னை: ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை தொடர்ந்து இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியுள்ள படம், ‘தமிழ்க்குடிமகன்’. இதில் சேரன், துருவா, பிரியங்கா, தீபிக்‌ஷா, லால், அருள்தாஸ், எஸ்.ஏ.சந்திரசேகரன், வேல.ராமமூர்த்தி, மு.ராமசாமி, ரவிமரியா நடித்துள்ளனர். லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இப்படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழாவில் சரத்குமார், அமீர், மாரி செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது இசக்கி கார்வண்ணன் பேசுகையில், ‘நான் சந்தித்த அனுபவங்களையே படமாக உருவாக்கியுள்ளேன். சாதி சார்ந்த வாழ்வு எப்படி இருக்கும் என்று காட்டியிருக்கிறோம்.

பிறக்கும்போது அனைத்து குழந்தைகளும் சமமே. வளர்ந்த பிறகுதான் சாதி என்ற ஏற்றத்தாழ்வுகள் வருகிறது. சாதியம் மற்றும் குலத்தொழில் பற்றி படத்தில் பேசியுள்ளோம்’ என்றார். பிறகு சேரன் கூறுகையில், ‘அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். ‘தமிழ்க்குடிமகன்’ மிகவும் புத்திசாலித்தனமான படம். சாதிகளை ஒழிக்க வேண்டும் என்பது உள்பட நிறைய நல்ல விஷயங்களை, சமூகத்துக்கு மிகவும் தேவையான கருத்து களைப் பேசியிருக்கிறோம்’ என்றார். சாம் சி.எஸ் பேசுகை யில், ‘இப்படத்துக்கு இசை அமைத்தது குறித்து மிகவும் பெருமை அடைகிறேன். நல்ல கதை என்பது வெளியுலகத்துக்கு தெரிந்தாக வேண்டும் என்பது என் ஆசை’ என்றார்.

The post சாதிகளை ஒழிக்கும் படம் ‘தமிழ்க்குடிமகன்’: சேரன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Isakki Karvannan ,Cheran ,Dhruva ,Deepiksha ,Lal ,Aruldas ,S.A.Chandrasekaran ,Vela.Ramamoorthy ,M.Ramasamy ,Ravimaria ,Lakshmi Creations ,Rajesh Yadav ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகை திரிஷா விவகாரத்தில் திடீர்...