×

ஸ்ரீ தேவியின் 60வது பிறந்தநாள் கூகுள் சிறப்பு டூடுல்

சென்னை: திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று சொல்லப்பட்ட விஜயசாந்தி, நயன்தாரா, மஞ்சு வாரியர் ஆகியோருக்கு முன்னோடி என்று ஸ்ரீ தேவி பற்றி சொல்லலாம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஹீரோயினாகி, தமிழில் இருக்கும் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்த அவர், பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தார். இந்தியில் தென்னிந்திய நடிகைகளால் ஜெயிக்கவே முடியாது என்று கணிக்கப்பட்டு இருந்த காலத்தில், பாலிவுட்டில் புயல் போல் நுழைந்து, இந்தியப் படவுலகின் கனவுக்கன்னியாக மாறிய ஸ்ரீ தேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதல் திருமணம் செய்த பிறகு மும்பையில் குடியேறினார். அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரண்டுபேரும் தற்போது ஹீரோயினாக நடிக்கின்றனர்.

கடந்த 2000ல் திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்த ஸ்ரீ தேவி, 12 வருட இடைவெளிக்குப் பின்பு, 2012ல் திரைக்கு வந்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ெகாடுத்தார். கடைசியாக அவர் நடித்த ‘மாம்’ என்ற படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. 2018ல் துபாய்க்கு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற ஸ்ரீ தேவி, அங்கு தங்கியிருந்த ஓட்டல் பாத்ரூமில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவரது மறைவு இந்திய திரையுலகையே அதிர வைத்தது. இந்தநிலையில், நேற்று ஸ்ரீ தேவியின் 60வது பிறந்தநாள் அவரது ரசிகர்களால் நாடு முழுவதும் எளிமையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டது. ஸ்ரீ தேவியின் திரையுலக சாதனைகளை கவுரவிக்கும் விதமாக வெளியிடப்பட்டு இருந்த அந்த டூடுல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து, இணையதளங்களில் வைரலானது.

The post ஸ்ரீ தேவியின் 60வது பிறந்தநாள் கூகுள் சிறப்பு டூடுல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sri Devi ,Chennai ,Vijayashanthi ,Nayanthara ,Manju Warrier ,Lady Superstars' ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள்...