×

தமன்னாவின் இரட்டிப்பு மகிழ்ச்சி

தமிழில் ரஜினிகாந்துடன் தமன்னா நடித்த ‘ஜெயிலர்’ படம் நேற்று திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் தமன்னா நடித்த ‘போலா சங்கர்’ படம் இன்று திரைக்கு வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்தது குறித்து தமன்னா கூறுகையில், ‘ரஜினிகாந்த், சிரஞ்சீவி இருவருமே மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள். அவர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் என் வாழ்நாள் கனவு நனவாகியுள்ளது. அதுவும் ஒரே நேரத்தில் இரு படங்கள் அடுத்தடுத்த நாளில் வெளியானதில் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

இதில் ‘போலா சங்கர்’ படம் தமிழில் அஜித் குமார் நடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக் என்றாலும், இயக்குனர் மெஹர் ரமேஷ் தெலுங்குக்காக சில மாற்றங்கள் செய்துள்ளார். இதில் படம் முழுக்க வருகிறேன். சிரஞ்சீவி தங்கையாக நடித்த கீர்த்தி சுரேசுடன் சேர்ந்து நடித்ததைப் பெரிதும் ரசித்தேன். இப்படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள் நாங்கள் நெருங்கிய தோழிகளாகி விட்டோம். ‘ஜெயிலர்’ படத்தில் நான் ஆடியிருந்த ‘காவாலா’ என்ற பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.

The post தமன்னாவின் இரட்டிப்பு மகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tamannaah ,Rajinikanth ,Tamanna ,Chiranjeevi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்த ரஜினியால் பரபரப்பு