×

ஒருவர் மட்டுமே நடித்த படம்


சென்னை: பார்த்திபன் தயாரித்து இயக்கிய ‘ஒத்த செருப்பு’ படத்தில் அவர் மட்டுமே நடித்தார். தற்போது ஜி.சிவா இயக்கி நடித்துள்ள படம், ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெய்ட்டுடா’. இப்படம் வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இதுகுறித்து ஜி.சிவா கூறுகையில், ‘ஒருவர் மட்டுமே நடித்த இப்படம், முழுநீள கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ளது. கதை ஒரே கேரக்டரின் பார்வையில் நகரும்.

கிருஷ்ணகிரி, ஒசூர், பெங்களூரூ ஆகிய பகுதிகளில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். காதல் பாடல், சோகப் பாடல் இடம்பெறுகிறது. அதிரடியான சண்டைக்காட்சிகள் இருந்தாலும், அக்காட்சிகளில் என்னை தவிர யாருமே திரையில் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்’ என்றார். ஓகி ரெட்டி சிவகுமார், அருண் சுசில் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மணி சேகரன் செல்வா இசை அமைத்துள்ளார். அர்த்தநாரீஸ்வரா மீடியா ஒர்க்ஸ் சார்பில் பாலா ஞானசுந்தரம் தயாரித்துள்ளார்.

The post ஒருவர் மட்டுமே நடித்த படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Parthiban ,G. Siva ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...