×

கவினுக்கு ஜோடியாகும் இவானா, திவ்யா பாரதி

சென்னை: கவினுக்கு ஜோடியாக இவானா, திவ்யா பாரதி நடிக்க உள்ளனர். ஹரீஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்த படம் பியார் பிரேமா காதல். இந்த படத்தை புதியவர் இளன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, இப்படத்தை தயாரித்து இருந்தார். இப்படம் வெளியாகி 4 வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் இளன் தனது 2வது படத்தை இப்போது துவக்கியுள்ளார். இதில் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. இதுவும் காதலுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக உருவாகிறது.

படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இதில் ஹீரோயின் யார் என்பது முடிவாகாமல் இருந்தது. சில ஹீரோயின்களிடம் இதில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் பெயரிடப்படாத இந்த படத்துக்கு கதைப்படி 2 ஹீரோயின்கள் தேவைப்படுகிறார்களாம். இதனால் லவ் டுடே இவானா, பேச்சுலர் திவ்யா பாரதி ஆகியோரை படக்குழு தேர்வு செய்துள்ளது.படத்தில் கவினுக்கு ஜோடியாக இவானாவும் திவ்யா பாரதியும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 3 மாதத்தில் இதன் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

The post கவினுக்கு ஜோடியாகும் இவானா, திவ்யா பாரதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ivana ,Divya Bharti ,Kavin ,Chennai ,Harish Kalyan ,Raisa Wilson ,Ilan ,Yuvan Shankar Raja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஈரோடு அருகே பட்டியலின இளைஞர் மீது வீடு...