×

அஜித்துடன் மீண்டும் இணையும் அர்ஜுன்

சென்னை: அஜித்தின் விடா முயற்சி படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விடா முயற்சி. அனிருத் இசையமைக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாக திரிஷா, தமன்னா நடிக்க இருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடிக்க தேர்வாகியுள்ளார். இதற்கு முன் மங்காத்தா படத்திலும் அஜித்துடன் இணைந்து அர்ஜுன் நடித்துள்ளார்.

இப்போது லியோ படத்தில் அவர் விஜய்யுடன் நடித்து வருகிறார். வில்லன் கேரக்டரில் அர்ஜுன் தாஸ் நடிக்க இருக்கிறார். மெயின் வில்லனாக நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

The post அஜித்துடன் மீண்டும் இணையும் அர்ஜுன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arjun ,Ajith ,CHENNAI ,Majid Thirumeni ,Anirudh ,Leica ,Trisha ,Tamannaah ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED செக் மோசடி வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது..!!