×

“இது ஜெயிலர் வாரம்” – நடிகர் தனுஷ் ட்வீட்!

நடிகர் தனுஷ் ‘இது ஜெயிலர் வாரம்’ என்று திரைப்படத்துக்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது. ‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் 4வது முறையாக ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதனால், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தின் டிரைலர் கடந்த 2ம் தேதி மாலை வெளியானது. இதில் ரஜினிகாந்தின் மாஸான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

இது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷ் ‘இது ஜெயிலர் வாரம்’ என்று படத்துக்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

The post “இது ஜெயிலர் வாரம்” – நடிகர் தனுஷ் ட்வீட்! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dhanush ,Twitter ,Rajinikanth ,Sun Pictures ,Mohanlal ,Shivraj Kumar ,Jackie Shroff ,Tamannaah ,Ramya Krishnan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அரவக்குறிச்சி ராமர்பாண்டி கொலை வழக்கு: 5 பேருக்கு நீதிமன்ற காவல்